46. பாருயர படைத்த பரமன் | UNIVERSE-GOD
Update: 2020-08-16
Description
பாவைகள் பல
படைத்தான் பரமன்!
அப்பாவிகளாய் படைத்திருந்தால்
அழுது தீர்த்திருப்பார்கள் !
அனாதைகளாய் படைத்திருந்தால்
அன்பைநாடி அலைந்திருப்பார்கள்!
அபலைகளாய் படைத்திருந்தாலும்
அக்கரை சேர்ந்திருப்பார்கள்!
ஆனால் அக்கறையாய்
அலைகடலில் தவிக்கும்படகுகளாய்
அன்பன் ஆளாக்கிவிட்டானே!
எக்கரை நாடிச்சென்றால்
எந்தம்படகுக்கு பாதுகாப்புகிட்டும்
எனும் கேள்வித்துடுப்பை
எம்முள்ளத்தில் போட்டுவிட்டானே!
துடுப்பை வழித்தாலும்ஏனோ
படகுமட்டும் நகர்வதில்லையே!
இக்கரையை அடைந்தால்
அக்கரை ஆசையாயுள்ளது,
அக்கரையை அடைந்தால்
அதிலுள்ள ஆபத்து
மறுகரைக்கு விரட்டுகின்றது.
படைத்த பரமன்ஒரு
தவறு செய்துவிட்டான்.
கடலுக்கு ஒருகரையை
மட்டுமே காட்டியிருக்கவேண்டும்!
நன்மைக்கும் தீமைக்கும்
ஒரேவழி இருந்தால்தான்
இரண்டின் விளைவும்
சமதளமாகியிருக்கும்!
சமாதானம் கிட்டியிருக்கும்-அஃதன்றி
வாழ்வும்சாவும் ஒரேவழியெனில்,
Comments
In Channel























